சிதறும் சில்லறைகள்
உலகின் ஏதோ ஒரு மூலையில்
கேட்கிறது ஒரு சிறுமியின் அழுகுரல்
சிறகிழந்து சிரிக்க வலுவிழந்து
வானில் பறக்க முடியாத நிலை
பால்குடி மறவா மழலையின்
பார்க்க கொடுமையான நிலை
ஆறறிவுள்ள அறிவிலிகள் செய்த
தாங்க முடியாத கொடூரம்
தெளிவான பேச்சு தொடங்குவதற்கு முன்
அவள் உயிர் மூச்சுநின்று விட போகிறது
கருவறையில் இருந்த வெளிச்சம் கூட
இந்த கல்லறையில் இல்லாமல் போனது
உணர்விழந்த உடல் மீண்டும் உயிர் பெறாது
கலையிழந்தசிற்பம் மீண்டும் சிலையாகாது
சிறகிழந்த பறவை மீண்டும் பறக்க முடியாது
அது போல தான்,
சிதறிய இச்சில்லரையின் வலி எப்போதுமே மாறாது!!!
காலநிலைகள் மாறினாலும் இச்சிறுமியின்
கண்ணீர் நிலையில் என்றுமே
மாற்றம் வராது????