மீண்டு செல்லவோ
கழுத்தை நெரிக்கும் டையும்
காலை அரிக்கும் ஷூவும்
சுற்றி சுழலும் நாற்காலியும்
எந்நேரமும் கண்சிமிட்டும்
கணிப்பொறியும்
எரிச்சலடைய செய்கிறது...
லட்சங்களை அடைவதே
லட்சியமாய் கொண்ட
குக்கிராம குடியானவனின்
முதல் தலைமுறை பட்டதாரி
மகனான எனக்கு...
லட்சங்கள் இன்று
துச்சமாகிவிட்டது
அன்று வியப்பூட்டிய
விண் முட்டும் கட்டிடங்கள்
இன்று வெறுப்பூட்டுகிறது
டொமினோக்களும், மெக்டொனால்டும்
அலுத்து விட்டது...
வாகனப் புகையிலும்
மனித அலையிலும்
நீந்தி செல்லும் இந்த
நகர வாழ்க்கை
நிலை குலைய செய்கிறது
பொட்டல் காட்டின்
புழுதி காற்று
மீண்டும் வீசாதோ?
கேப்பை களியும்
மோர் மிளகாயும்
மீண்டும் கிடைக்காதோ...?
துக்கம்
தூக்கத்த பந்தாடுகிறதே...?
மீண்டும் செல்லவோ
மீண்டு செல்லவோ
என் இளைய தலை முறை விரும்பாதே...?