புதுக்கவியே வருக புத்துணர்வை தருக

எழுத்து போற போக்கைப் பார்த்தா
எங்கே போவேன்னு தெரியல ஆத்தா!
அள்ளிக் குவிக்கும் படைப்பாளி முன்னே
கிள்ளுக் கீரையானேன் நானே !!

நித்தம் கவிதைகள் குவியும்
முத்த மழையில நனையும்
முயற்சி கவிதைகளெல்லாம்
பின்தள்ளி போகுதென்னை!!

சிந்திக்கவும் கவியிருக்கு
சிரிக்கவும் கதையிருக்கு
சில்லறைதனமா நானெழுத
சிந்தனை தூண்டுது சிலர் கவி !

புதுபுது படைப்பாளி படைத்தல்
பூரிக்க செய்தே தினம் அசத்தல்
ஏதோ செய்து இதயத்தை குடையுது
எவண்டா சொன்னான் தமிழ் தூங்குதென்று?

எழுத்தில் பாருங்க...
எப்படி வளருதென்று
அழகாய் படைக்கும் அறிமுக கவியும்
அழகாய் கருத்திடும் அனுபவ கவியும்

கருத்தாய் படைக்கும் வாலிப கவிஞன்
காதலை கூட கசந்திடச் செய்யும்
தமிழ் படித்திட இசைந்திட கூடும்
நானும் ஒரு ஓரத்தில் ...
தமிழ் வளரும் தாகத்தில் ...

புதுபுது படைப்பால்
தளத்தொகுப்பாய் நிறையட்டும்
வாழ்த்துகிறேன் வருங்காலத்தில்
புது கவிஞர்கள் தளத்தை
மெருகூட்ட வளரட்டும் செந்தமிழ் !

எழுதியவர் : கனகரத்தினம் (25-Jun-14, 7:07 pm)
பார்வை : 3925

மேலே