கனவுகள் சுகமானவை

கனவுகள் சுகமானவை.....
பொழுதும் புலருது;
மலரும் அரும்புது;
சூரியன் சிவக்குது;
சுகமாய் விடியுது;
கண்கள் திறக்குது; கண்ணில்
உன்னுருவம் சிரிக்குது;
இமைகள் மறைக்குது;
இதுஎன்ன நினைவிது;
கனவின் தொடர்பிது;
காதலை நினைக்குது;
மறுகணம் மூடுது..கண்கள்
புதுசுகம் தேடுது;
வந்தது நீயா?
வாசனை உனதா?
விழிகள் சிரிக்குது;
உதடுகள் புலம்புது;
உன் பெயர் சொல்லுது;
உன்னையே அழைக்குது;
உருகிட துடிக்குது;
இமைகளின் போட்டியில்
இறுதியில் கனவும் கலைந்தது;
இயல்பை உணருது;என்னிதயம்
ஊமையாய் அழுகுது.