கொலை
மனிதா மானுடம் எங்கு போயிற்று ?
உன் போன்ற மனிதனை ஏன்
அழிக்க துடிக்கிறாய் ? அவன்
தவறு செய்து விட்டதாலா ?
இல்லை நீ செய்த தவறை அவன்
பார்த்து விட்ட தாலா ? அதுவும்
இல்லை அவன்(ள்) உன் இச்சைக்கு இணங்க
மறுத்த தாலா ? எதற்காக ? மிருகங்கள்
கூட தன் இனத்தை அழிப்பது இல்லையே/ பிறகு
ஏன் ? ஓ மிருகங்களுக்கும் உனக்கும்
வித்தியாசம் உண்டு என்று காட்டவா ??
இதிலா வித்தியாசம் காட்டுவது
மானிடா உன் வித்தியாசத்தை அன்பில் காட்டு
முடியவில்லையா ? அறிவில் காட்டு//
அப்பொழுதுதான் கொல்லும் மானுடம் வெல்லும் ...