புன்னகையாள் செய்நன்றி
பொழுதுகள் மறைந்தாலும் என்
பெண்ணவளின் சிந்தனை
பொங்கியே வருகிறதே உன்
புன்னகையில் என்னமர்மம் செய்தாயோ
காலையின் கரம்களில்
கதிரவன் கண்விழிக்கும் முன்னே
கட்டிலா உடலைபெற மெதுநடை
கிளம்பினேன் சாலையிலே
சேவல்கள் கூவை யிலே
செந்நிற கதிர்கள் தரையில்
செழிப்புற மின்னையிலே
சாலையின் மறுவோரம்
அதிர் வொன்று வந்ததையா
பருவ வயதினிலே
எவ்வுயிரும் அழகுதான்
பருவ மங்கையவள்
மெல்லிடை பெறுவதற்காய்
மெதுநடை வந்திருந்தாள்
வந்தவளோ விரைவுடனே
செல்கையிலே சாலையதிலே
செவ்வக குளியதனை
காரிருள் மத்தியிலே
கண்டிடாது விழுந்துவிடாள்
விழுந்தவள் எதிர்முனையில் அதுவரை
காணவில்லை அவள் முகம்
கலங்கிட்டு உதவிகாய்
அவள் அருகில் சென்று நின்றேன்
விழுந்தவளோ வலியுடன்
எழுதிட முயல்கையிலே
என்கரம் கொடுத்து
சிறுஉதவி செய்து நின்றேன்
எழுந்தவள் வலிகொண்டு
அலறி அழுகையிலே
அவள்கணுக் காலில்
அடியென்று ஊகிக்க முடித்து
பட்டேன்று அவள் அருகில்
பதற்றதுடன்நான் அமர்ந்து
சிறு முதலுதவி செய்யவா என்று
வினவிட்டு செய்தேன் முதலுதவி
என் அறிவு கொண்டு பார்க்கையில்லே
அவள் கால் உடைவேன்று என்
அறிவுரைகையிலே சிறு பற்றிட்டு
ஏற்றினேன் ஆஸ்பத்திரிக்கு
உதவிய முகம்கண்டு அவள்
சிந்திய புன்னகைக்கு
சிந்தனை காலத்திற்கும் உன் உதவிக்கு
நன்றி என்று அவள் கண்களே உரைத்ததையா