யதார்த்தம் Mano Red
யதார்த்தம் என்பது
நெடுங்காலமாக
முகத்தில் அறைவதாகவே
இருந்து வருகிறது,
வருடிக் கொடுப்பதாக
எந்த வரலாறும் பேசியதில்லை..!!
அழகான ஆண்
முட்டாள் எனில்
பெண் ஏமாறுகிறாள்,
அழகான பெண்
புத்திசாலி எனில்
ஆண் ஏமாறுகிறான்...!!
எதையும் கற்றுக் கொள்ள
பொறுமை வேண்டுமென
எதிர்பார்க்கும் போது,
முதலில் கற்க வேண்டியது
அந்த பொறுமை தானே...!!
எல்லா இடங்களிலும்
இறைவன் இருக்கிறானா என
தெரியவில்லை..??
ஆனால்,
இருக்க வேண்டிய இடத்தில்
நிச்சயம் அவனிருப்பதில்லை..!!
நம்மைச் சுற்றி இருக்கும்
எல்லோருக்கும்
மிகப் பிடித்தமானவர்களாக
இருக்க வேண்டுமெனில்,
நடிப்பதைத் தவிர
வேறு வழியே இல்லை ..!!
வரைமுறை மீறித்
தவறு செய்தாலும்
திறமையாகச் செய்தால்,
எப்படியாவது
தப்பிச் செல்ல
எதாவது வழி பிறந்து விடுகிறது...!!
அம்மாவைப் பற்றி
எத்தனை கவிதைகள் வந்தாலும்,
அத்தனை கவிதைகளும்
அம்மாவிற்கு தெரியாமலே
யதார்த்தமாக வாசிக்கப் படுகிறது
வெறும் கவிதையாக......