ஒத்தையடிப்பாதை
விழித் திரையை மெல்ல விலக்கிப் பார்த்தேன்
கனவுகளின் சுமையில் மூடின இமைகள்..
கண்ணுக்குள் உலவும் கனவுகள்
விழிகளைத் தாண்டி வருவதில்லை ...
விழி தாண்டி விழும் நிகழ்வுகளிலோ
கனவின் நிழலும் விழுவதில்லை ...
கனவில்லா கனத்த நிகழ்வுகளில்
கனவுகளைத் தேடும் கண்கள்...
தேக்கின கனவுகளோடு பயணிக்கும் கண்கள்
நினைவுகளை செதுக்குகின்றன நாள் தோறும்...