புற்றுநோய்

இருவிரலின் இடையிலே இருக்கும் ஓர் ஆயுதமே
இறுதியிலே இருமல் தந்து உன் இன்பத்தினை போக்கிடுமே
புகையிலையோ புகையாகி நொடியினிலே மறைந்திடுமே
புற்றுநோயோ உன் உடல் புகுந்து வித்தைப் பல செய்திடுமே
கற்றறிந்த மருத்துவர் நல் கருத்தினை கூறிடவே
நுட்பமாய் அதை அறிந்து , உன் நுரையீரலை காத்திடுவாய் !

மங்கை அவள் மார்பினிலே மர்மமாய் தோன்றிடுமே
நங்கையவள் உற்றோரின் நலனையும் குலைத்திடுமே
மார்பின்றி மற்றிடத்தில் மறைமுகமாய் பரவிடுமே
மரணத்தின் பிடியில் அவளை மெதுவாகத் தள்ளிடுமே
மருந்துடன் போராடி பேதையவள் பேதலித்தால்
மறுவாழ்வு வேண்டி அவள் , மார்பு தனை அகற்றிவிட்டால்....

எழுதியவர் : க.ஆதிரா (27-Jun-14, 7:45 pm)
Tanglish : putrunoi
பார்வை : 395

மேலே