ஒழுக்கத்தின் உயர்வு

ஒழுக்கம் என்பது உரமாகும் - நம்
அறிவுக்கு அதுவே அரணாகும்
விழுப்பம் தந்து வாழ்க்கைக்கே - நல்ல
ஏற்றம் நல்கிடும் வரமாகும்

ஒழுக்கம் இல்லா வாழ்வினிலே - என்றும்
உயர்வுக்கு இடமே இருக்காது
இலக்கு இல்லாப் பாதையாகும் - அது
துடுப்பு இல்லாத் தோணியாகும்

ஒழுக்கம் பேணா அறிவினால் - பல
வழுக்கள் வாழ்வில் சேர்ந்திடுமே
இழிந்த பிறப்பாய் மாறிடுமே - பிறர்
பழிக்கும் படியாய் ஆகிடுமே

ஒழுக்கம் என்னும் கவசத்தை - எந்தப்
பொழுதும் கையிற் கொள்வாயே
உலகம் உன்னை வாழ்த்திடுமே - ஓர்
உத்தமன் என்றே வணங்கிடுமே!

எழுதியவர் : குழலோன் (27-Jun-14, 10:10 pm)
சேர்த்தது : குழலோன்
பார்வை : 639

மேலே