ஏதோ ஒரு வெறுமை

ஏதோ ஒரு வெறுமை
ஏனோ ஒரு தனிமை
என்னவோ ஒரு வெறுப்பு
எதனாலோ ஒரு தவிப்பு...

வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்க
வழக்கம்போல் நானும் ஓடித்தொடர
வாழ்ந்தது எதனால்? வாழ்வது எதற்கு?
வாழ்வில் என்னதான் இருக்கிறது?...

என்னால் என்ன நடந்தது?
என்னை வைத்து எது நடந்தது?
எனக்காக எதுவும் நடந்ததா!
எனக்கும் எல்லாமும் நடக்குமா?...

சொல்லாமல் இருக்க எவ்வளவோ!
சொல்லிக்கொள்ள சில இருக்கிறதா?
சொல்லாமல் செல்ல எத்தனையோ!
சொல்லிச் செல்ல எதாவது?...

உயிராகி வந்தது எதனால்?
உயிராக இருப்பது எதற்காக?
உயிரோடு இருந்து என்ன?
உயிருக்கு உயர்வு எது?...

எழுதியவர் : சீர்காழி சபாபதி (28-Jun-14, 11:42 am)
Tanglish : yetho oru verumai
பார்வை : 315

மேலே