தென்றலுக்கு காதல் வந்ததே

தென்றல் காற்றுக்கு காதல் வந்ததே
அது பாட்டுக்கு சென்று செடியை தொட்டதே
காதலனின் கை பட்டதுமே அந்த செடியும்
மேனி சிலிர்த்ததே
காற்று தொட்டு, தொட்டு தழுவி செடியில்
பூவும் மலர்ந்ததே
காதலனின் பரிசாக கிடைத்த மலரை
தாங்கி செடியும் சிரித்ததே
ஆண்மகன் ஒருவன் மலரை பறித்ததும்
செடியும் கோபம் கொள்ள
அவன் தன் காதலை மலர செய்ய
பூ பறித்தான் என்றறிந்து
அதுவும் அவனை மன்னிக்க...!
பூவும் மகிழ்ந்தது, காதலை
வளர்த்திட தான் காணிக்கையாய்
போவதை நினைத்து
தென்றலின் காதலும், அந்த
ஆண் காதலும் ஆயிரம் காலங்கள்
வாழட்டுமே
நாம் வாழ்த்திட பூக்களும்
பூவைகளும் மலரட்டுமே