பிடிக்கவில்லை என்றாவது சொல் 555

அழகே...
நான் கொடுக்கும் மலரை
நீ காலில் மிதிப்பாய்...
முட்கள் இல்லாத
ரோஜா வாங்கிவந்தேன்...
நான் கொடுக்கும்
காதல் கடிதத்தை...
நீ கிழித்தெறிவாய்...
அதற்காக மெல்லிய
காகிதம் கொண்டுவந்தேன்...
பரிசு பொருள் தந்தாள்
தூக்கி எறிவாய்...
கணம் இல்லாமல்
வாங்கிவந்தேன்...
ஒர கண்ணால் பார்ப்பாய்
இருவிழிகள் வாங்கிவந்தேன்...
உன் புன்னகையால்
என்னை கொள்வாய்...
அதற்காக உயிரோடு
வந்தேன்...
எல்லாம் தெரிந்தும்
தெரியாதவளாய்...
புரிந்தும் புரியாதவளாய்
என்னை கொள்வதேன்...
உன்னை நினைக்க
வைத்து...
என்னை நினைவிழக்க செய்யும்
தனிமையை நான் வெறுக்கிறேன்...
குருதி சிந்தாமல்
ஆயுதங்கள் இல்லாமல்...
யுத்தம் செய்யாமல் என்னை
துடிக்க துடிக்க கொள்ளும்...
உன் மௌனம்
வேண்டாமடி...
வலிதாங்க முடியவில்லை
என்னால்...
இதழ் பிரித்து காதல்
மொழி பேசிவிடு...
பிடிக்கவில்லை என்றாவது.....