என்னை கொன்றுவிட்டு சென்றவளே 555

உயிரானவளே...

எனகென ஓர் உலகம் அது
நீதான் என்று இருந்தேன்...

நீயோ உன் பெற்றோர் சொன்ன
உலகமே பெரிதென்றாய்...

என்னையும் என் காதலையும்
உதறிவிட்டு சென்றுவிட்டாய்...

இல்லையடி என்னை
கொன்று சென்றுவிட்டாய்...

என் வாழ்வில் வந்த
இன்பமும் நீதான்...

துன்பமும் நீதான்...

எளிதாக என்னை
மறந்துவிட்டாய்...

எளிதாக உன் மனதிலிருந்தும்
என்னை மறைத்துவிட்டாய்...

என்னால் முடியவில்லையடி
உன்னை போல்...

உன் நினைவுகள்
ஒவ்வொன்றும்...

என்னில் மாறாத
காயங்களை ஏற்படுதுத்தடி...

உனக்கு இது
சாதரணமாக இருக்கலாம்...

எனக்கோ என் வாழ்வில்
என்றும் மறையாத...

வடுக்களாய் மாறிவிட்டதடி...

என்றும் உன் வாழ்வு
சிறக்க என் ஆசிகள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Jun-14, 5:46 pm)
பார்வை : 598

மேலே