சுடர்விடும் தாபங்கள் ✿ சந்தோஷ் ✿
![](https://eluthu.com/images/loading.gif)
சுடர்விடும் தாபங்கள் (அவளுக்காக)
-----------------------------------------------------
மூன்று யுகங்கள்
கண்ட கனவை
வரும் அடுத்த
நூறு ஆண்டுக்களில்
எப்படியடி
நான் தீர்ப்பேன்
நம் காதல்
கனவு கணக்கை. ?
இன்னும் மிச்சம்
கோடி ஆண்டுகள்
நாம் வாழ வேண்டுமே
படித்த தெரிந்த
ஊடல் கூடல்
விளையாட்டெல்லாம்
வாத்சாயனர்ரை மிஞ்சி
தொல்காப்பியம் போல
கற்பனையில் காவியம் எழுதி
விற்பனைப்படுத்தாமல்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
எல்லாம் உனக்கு
அறிமுகப்படுத்திடவே என்
தொண்ணூறு வயதும்
நமக்கு பற்றாக்குறையே..!
செல்லமே..!
நமக்கு இன்னும்
இரண்டு பிறவி வேண்டுமே..!
----------------------------------------------------------------------------
உனை நான்
அழைக்கும்போது
உன் அலைப்பேசியில்
ஒலிரும் ஒலி
என் இதயத்துடிப்புதான்
என்று எப்போது
அறிவாயோ என்
ஆருயிரே ?
----------------------------------------------------------------------------
ரம்பை, ஊர்வசி, மேனகா
சுற்றி சுற்றி வந்து
என்னிடம்
இச் நச்சென்று
முத்தமிட்டாலும் கூட
அன்பே ! உனக்காக மட்டுமே
என் ஹார்மோன்கள்
கிளர்ச்சியடைவோம்
என பிடிவாதம் செய்கிறது.
----------------------------------------------------------------------------
உனைவாரி சுருட்டி
இழுத்து அனைத்து
உன் உதட்டில்
என் உதட்டை
பதியம் போடக்கூட
நீ அனுமதிக்க தேவையில்லை.
”என் செல்ல சக்கரக்குட்டி”
என்று உன் சாக்லேட்
தித்திப்புவிரலின் தட்டச்சில்
வரும் ஒரு குறுஞ்செய்தி போதும்.
உன் உடல் ஊடுவருவிய
பெரும் உச்சநிலை இன்பத்தை
கண்டு களித்துவிடுவேனடி..!
----------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்