உயிர் போகும் வேதனை

கருவில் சுமந்து
வலி தாங்கி
தன் மூச்சை பிடித்துக் கொண்டு
குழந்தை மூச்சை
உருவாக்கும்
தாய்க்கு அது ஆனந்த வேதனை.....

அந்த குழந்தை
ஓடியாடி விளையாட ஆரம்பிக்கும்போது
ஒரு ரூபாய் பலூனில்
தன் மூச்சை காற்றாய்
அடைக்கும் போது
குழந்தைக்கும் அது ஆனந்த வேதனை...

ஆனால் அதுவே தாய்க்கு??
உயிர் போகும் வேதனை....

எழுதியவர் : சாந்தி (30-Jun-14, 11:07 pm)
Tanglish : uyir pogum vethanai
பார்வை : 156

மேலே