விண்ணாயா மண்ணாயா

மண்ணில் நர்சரிப் பள்ளியில்
பணியாற்றும் ஆயா
படிக்காதவர் குடிசையில் வசிப்பவர்
குறைந்த வருமானம் எளிமையான ஆடை
கணவன் குடிகாரனாய் இருப்பான்.

விண்ணில் ஆகாய விமானத்தில்
பணியாற்றும் ஆயா*
பன்னிரண்டாம் வகுப்பு தாண்டியிருப்பார்
நல்ல உயரம் அழகானவர்
ஆங்கிலம் தமிழில் சரளமாகப் பேசுவார்
வேறுசில மொழிகளும் அறிந்திருப்பார்.
தங்குவது ஐந்து நட்சத்திர ஓட்டலில்
பணிக்குச் செல்வது காரில்
பெரிய அதிகாரிக்கு கிடைக்கும் சம்பளம்
சலுகைகள் பலப்பல
அவர் குடும்ப வாழ்க்கை பற்றி
எனக்கொன்றும் தெரியாது.

விண்ணாயா மண்ணாயா
இருவருக்கும் செய்யும் பணி
எக்கோணத்தில் பார்த்தாலும்
அதிக வேறுபாடில்லை.

*ஏர்ஹோஸ்டஸ்

எழுதியவர் : மலர் (1-Jul-14, 9:12 am)
பார்வை : 179

சிறந்த நகைச்சுவைகள்

மேலே