கல்விக் கோயில்
வித்யா என்றால் கல்வி
மந்திர் என்றால் கோயில்
இந்தக் கல்விக் கோயில்கள்
மாணவச் செல்வங்களில்
ஒரு மேதையைக்கூட
உருவாக்கப் போவதில்லை.
எல்லாக் கல்விக் கோயில்களும்.
மனப்பாடம் செய்யவைத்து
இயந்திரத் தனமாய்
மதிப்பெண் பெறவைக்கும்
மந்திரத்தை.தானே கற்பிக்கின்றன.
இந்த நூற்றுகு நூறுகளில்
ஒருவர்க்கூட மேதையாக முடியாது.
சிந்திக்க விடாமல் படிக்க வைப்பதோ
நல்ல கல்வி?
பாடப் புத்தகம் தவிர
வேறு நல்ல புத்தகங்களை
அறியாத குழந்தைகள்
எப்படி பெரியார் போல்
ராஜாஜி போல்
ப்ள்ளிப் படிப்பையே முடிக்காத
காமராசர் போல்
கண்ணதாசன் போல்
புகழ் பெறுவார்கள்?
பணம் பொருளீட்ட மட்டும்
கற்றுத் தருவதுவா கல்வி?