கல்லணை

படித்தேன் பகிர்கின்றேன்

கல்லணை உருவான விதம்
===========================

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால
சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள்
துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய
அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன
விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர்
பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும்
ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம்
கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின்
கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள்
இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக
மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய
பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும்
நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள்
போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப்
புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும்
ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப்
போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய
அணைதான் கல்லணை. ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர்
காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம்
ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் .


காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப்
பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர்
ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை....
கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி…

==============================================================
பெருமை படுவோம் தமிழனாய் பிறந்ததற்கு =====

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (2-Jul-14, 10:18 pm)
சேர்த்தது : kirupa ganesh
Tanglish : kallanai
பார்வை : 1709

சிறந்த கட்டுரைகள்

மேலே