காற்றோடுக் கலந்துவிட்டதென் முத்தங்கள்-வித்யா

காற்றோடுக் கலந்துவிட்டதென் முத்தங்கள்-வித்யா

உயிர்குடிக்கும் அட்டையொன்று
கொஞ்சம் கொஞ்சமாக
என்னிதயம் குடைந்து
உயிர் குடித்துக்கொண்டிருக்கிறது.............!
பரவசமான வலி அது..........

கனவுகளிலும், சொல்லாத வார்த்தைகளிலும்
தீண்டாத ஸ்பரிசங்களிலும்
பரிமாறிக்கொண்ட முத்தங்களெல்லாம்
காற்றோடே கலந்து போனதோ.........?
வெறும் கானலாய் மாறியதோ.?

நீயே காதலானாய்
கள்வனானாய்
ஏன் காவலானாக வரவில்லை.?

நான் விரும்பியே
தொலைத்த நித்திரைகள்
இரவின் அனாதை வீதியில்
அலைமோதுகிறது.........!

உன்னை காதலிக்க
ஆயிரம் முறைகள்
கற்றுவைத்திருக்கிறேன்............
காதலனே உன்னை நீங்கினால்
நானென்ன ஆவேன்...?

கண்ணீர் கொண்டே செதுக்கிய
என் காதல்.......
தனக்குத்தானே ஆயிரம்
சமாதானங்கள் சொல்லிக்கொள்கிறது.........!
ஆயினும் உன் காதல்
நீங்கலாக என்னிடம் ஒன்றுமே இல்லை.

புகைப்படத்தில் புன்னகைக்கிறாய்.......
பொறாமையாக இருக்கிறது..!
மனதிற்குள்ளேயே நேர்காணல்
நடத்திய தருணங்களில்
நீ கொட்டித் தீர்த்த மௌன வார்த்தைகள்
சப்தமாக சிரிக்கின்றன.........
ஏளனம் செய்கின்றன.

அறிவில்லாதவளாய்
அர்த்தமில்லா வாழ்வுதனை
நான் வாழ்வது எங்கனம்...

நொடிக்கொரு மூங்கில்
காடு சாம்பலாகிறது என்னில்........
நாளுக்கொருமுறையாவது
எனை நினைப்பாயென நினைக்கும்போது............!

கண்ணீரில் தீட்டிய ஓவியங்கள்
கண்களுக்குத் தெரிவதில்லை போலும்.......
வா அன்பே.....உயிர் கொண்டு தீட்டலாம்
நம் காதலை.............!

எதுவரையிலும் பொறுமை காப்பாய் நீ...?
நாளை..?
நாளை மறுநாள்..?
எதுவரையிலும்.......?
என் மணவோலை வரும்வரை.?
என் மரண ஓலை வரும் வரை...?

நீளுகின்ற நீட்சிகளில்
நகராமல் நானிருக்க
நல்முடிவொன்று நீ தேடிட கூடாதா.?

இதயம் கதறும்
ஓசைகள் கேட்காது போலும்.........!

எழுதியவர் : வித்யா (3-Jul-14, 11:55 pm)
பார்வை : 492

மேலே