உதவிடும் கரம் - நாகூர் லெத்தீப்

பிஞ்சு உள்ளம்
அள்ளிக்கொடுக்க
நினைக்கிறது
தடுப்பதற்கு யாரும்
இல்லை....!

தர்மத்தை
வழங்கும்
கைகள் சொர்கத்தை
பெறுமே
ஆண்டவனிடத்தில்
பெயரும் பெறுமே.....!

ஏழைக்கு
கொடுக்காத பணம்
பிணம் தின்னி
கழுகுக்கு
ஒப்பானது
வெறுப்பானது......!

கையில் காசு
இருந்தும் மனம்
இல்லாத
மனிதன் இருந்தும்
இல்லாதவனே.........!

உதவிடும்
உள்ளத்தை வளர்ப்பது
உதவிடும் மனிதனோடு
செர்வதாலே
ஏற்படுமே.....!

நாம் தொடுக்கும்
உதவி
இறைவனிடத்தில்
உயர்வை தருகிறது
உண்மை
வளர்கிறது.......!

கொடுக்காத
மனம் பணம் இருந்தும்
யாசகனே
இந்த நிலையற்ற
உலகிலே......!

பாவிகளிடம்
போய் சேரும் பணம்
பாவத்தை
விலை கொடுத்து
வாங்கவே......!

தீராத நோயை
விட உதவாத தர்மம்
நோயை விட
கேவலமானது
கெடுதியானது.......!

எதை கொண்டு
செல்ல போகிறோம்
உனது மரணத்தை
நீ அடையும்போது.....!

காலம் செல்கிறது
குறப்பட்டுவா
உதவி செய் மனித
நேயத்தை
வளர்த்திரு........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (4-Jul-14, 10:15 am)
பார்வை : 141

மேலே