சாரல் மழை நீயெனக்கு…

சட்டெனெத்
துவங்கி விடுவதில்லை
சாரல் மழை…

குடையின் அவசியமின்றி,
விரியும் அதன் கைகளுக்குள்
என்னை இயல்பாய்
இணைத்துக்கொள்ள முடிகிறது….

எவரையும் விரட்டி விடாத
கொஞ்சம் தந்திரத்தோடும்,
நிறைய அரவணைப் போடும்….
துளித்துளியாய்
உடலிலும்,
பின் மனதிலும்
நிறைவாய் நிறைகிறது….

சாரல் மழையை -
துவங்குகையில்…
உன் பெயராகவும்
நனைக்கையில்
நீயாகவும்
நினைத்துக்கொள்வேன்…!

எழுதியவர் : ஆண்டன் பெனி (4-Jul-14, 10:36 am)
பார்வை : 899

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே