சகலமுமானவன் நான் - துறவி
உனக்கு எந்தெந்த இன்பங்கள் எல்லாம்
அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லையோ
அந்தந்த இன்பங்களினால்
உருவாகும் துன்பங்களிலிருந்து
உனக்கு விடுதலை கொடுத்திருக்கிறான்
இறைவன்
என்பதே உண்மை.
நீ எவ்வளவு இன்பங்களை
அனுபவிக்கிறாயோ
அதே அளவு துன்பங்களை
நீ அனுபவித்தே தீரவேண்டும்
இது நியதி.
இன்பமும் துன்பமும்
இரண்டு தராசுத் தட்டுக்கள் போல
ஒன்றுக்கு ஒன்று
ஏற்றம் இறக்கம் இருந்தாலும்
சமநிலைக்கு கொண்டு வராமல்
விதி விடாது.
வாழ்க்கையின் முன்பகுதியில்
துன்பப்பட்டால் பின்பகுதி சிறக்கும்.
முன்பகுதி இன்பமாய் கழித்தால்
பின்பகுதி துன்பப்பட நேரிடும்.
அதனால் இளமையும் வலிமையும்
இருக்கும்போதே
துன்பத்தை அனுபவிக்க பழகிக்கொள்.
அதனால் எவ்வளவுக்கு எவ்வளவு
சிற்றின்பங்களைத் தவிர்க்கிறாயோ
தவிர்த்துவிடு
அவ்வளவு நல்லது.
நீந்திக் கடந்த
நின்ற பெருமான் போல்
தைரியம் கொள்.
பிறவிக் கடலை
நீந்திக் கடக்க செய்யும் தியானத்தில்
ஆடாமல் அசையாமல்
உடம்பும் மனமும்
திட நிலையில் இருக்கவேண்டும்.
கையைத் தூக்கினாலே
கர்மம் என்கிறான் ஞானி.
நீ எவ்வளவு சேட்டை செய்கிறாய்
அதற்கெல்லாம் பிரதிபலன்
இல்லாமலா இருக்கப் போகிறது.
கவனம் கொள்.
இளமையை வீணடிக்காதே..
விவேகமும் ஆனந்தமும்
பெருகட்டும்
உன்னோடு கலந்துரையாட
காத்திருக்கிறது அவன் ஆத்மா...
அவன் கேட்ட
நூறு இளைஞர்களில்
நீயும் ஒருவனாய் வா...
முன்வா நண்பா...