தோடு
ஒரு மனைவி வெளி நாட்டில் இருக்கும் தன கணவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.
அவள் கணவன் அவளுக்கு தோடு வாங்கித்தருவதாக சொல்லி இருந்தான். அதை நேரடியாக சொல்ல கூச்சப்பட்டு இப்படி எழுதினாள்.
அன்பே நான்
என்றும் உங்களையே
நினைப்ப"தோடு"
அதே நினைவில் இருப்ப"தோடு"
உங்களுக்காக ஒரு பரிசு
வாங்கிய"தோடு"
நம் குழந்தைகள் நலத்"தோடு"
இருப்ப"தோடு"
நீங்கள் நலத்"தோடு"
இருப்பதற்கு வேண்டுகிறேன்.