புரியாத காதலை புரியவைத்து செல்லடி 555

என்னவளே...

உன்னைப்போல அழகான
பெண்கள் எல்லாம்...

என்னை கடந்து
போகிறார்கள்...

என்னை நேசிக்கிறேன் என்று
வாய்மொழி சொன்னவர்களும் உண்டு...

உன்னை மட்டும்
நான் நேசிக்க...

நீ என்ன செய்தாய்
என்னை...

உன் வாசல் வழி
நான் வந்தால்...

கன்னத்தில் கை வைத்து
வாசலிலே அமர்ந்திருக்கிறாய்...

என்னை பார்த்த வண்ணம்...

சில நேரங்களை
என்னை கண்டதும்...

உள்ளே ஓடிவிடுகிறாய்...

என் காதலோடு நான் எதை
சேர்த்து கொள்வது...

புரியாமல்
தவிக்கிறேனடி நான்...

புரியாத என் காதலை
புரிய வைத்து செல்லடி நீ...

காத்திருக்கிறேன்
உன் அன்புக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Jul-14, 4:03 pm)
பார்வை : 193

மேலே