எல்லாம் சில காலம்
ஏற்றங்களானாலும்,
இறக்கங்களானாலும்
எல்லாம் சில காலம்.
புரிதலாய் இருந்தாலும்,
பிரிதலாய் இருந்தாலும்,
எல்லாம் சிலகாலம்,
அடை மழையானாலும்
கொடுங்கதிர் ஆனாலும்,
எல்லாம் சிலகாலம்,
கூடியே நின்றாலும்,
ஊடலாய் சென்றாலும்,
எல்லாம் சிலகாலம்,
என்னுயிர் என்றாலும்,
யாரடா என்றாலும்,
எல்லாம் சிலகாலம்,
நான் மதி என்றாலும்,
எனை மிதி என்றாலும்
எல்லாம் சிலகாலம்,
வீணை நானென்றாலும்,
விதியென சென்றாலும்,
எல்லாம் சிலகாலம்.
மனிதன் வாழ்விங்கு
எல்லாம் சிலகாலம்,
மதித்து அறிவோமே,
இதுவும் சிலகாலம்!