ஞாபகங்கள்

தாத்தாவின் விரல் பிடித்து
ஆளில்லா சாலை வழியே
இரயில் பார்க்கச்சென்றது !
அக்காவின் உண்டியலில்
பணம் திருடி பள்ளிக்கு
வெளியே மிட்டாய் வாங்கியது !
பாட்டியின் மூக்குபொடி டப்பியை
ஒழித்துவைத்து தேடி கண்டுபிடித்தது
போல் நல்ல பெயர் வாங்கியது
அம்மாவின் கைருசி தேடி
அடுப்பங்கலை சென்று அவள்வைத்த
கோழிக்குழம்பை குடித்துவிட்டு
ஒன்றும் அறியாதவன் போல் விளையாட சென்றது !
அப்பா தந்த ரூபாய்களை
சிறுக சிறுக சேமித்து வைத்தேன்
சில்லறையில்லை என அப்பா அதை எடுத்தபோது
மாடியின் படிகளில் அழுதுகொண்டு கிடந்தது !
அனைத்தும் ஞாபகம் வருகிறது
உறவுகளைவிட்டு பரதேசியாய் எங்கோ
ஒரு மூலையில் வேலைப்பழு தாங்காமல்
உடல்வலியால் படுத்திருக்கும் எனக்கு!!!!!!!!!!!!!!

எழுதியவர் : alagesan (4-Jul-14, 5:31 pm)
Tanglish : gnabagangal
பார்வை : 117

மேலே