இங்கும் வந்து விடுவார்களோ

எங்கும் அலைந்து திரிந்தேன் ....
திரிந்தது தான் தப்பா ??
ஆண் திரிகிறானே உள்ளாடை தெரியும் கால் சட்டையோடு ....
நான் அப்படி அலங்கோல
ஆடை அணியவில்லையே ....
பிறகு ஏன் கயவர்கள் என் கற்பை
சூறையாடினார்கள் ? ?
செய்த தப்பை மறைக்க கொடூர கொலை கூட செய்து விட்டார்களே ...
10 அகவை கூட நிரம்பாத வானம்பாடியாக இருந்தேனே!
இன்று வானம் மீது ஆவியாக ...
இங்கும் கயவர்கள் வந்துவிடுவார்களோ ?
என்ற பயத்தில் மாறு வேடம் புரிந்தவளாய் ...

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (5-Jul-14, 12:43 am)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 61

மேலே