கோபுரங்கள்

ஆலயக் கோபுரங்களைக்
கண்ட கண்கள் ,
இப்போது ,
எங்கெங்கு திரும்பினும் ,
அலை பேசி கோபுரங்களைக்
காணுகின்றன .

ஆலயக் கோபுரங்களைப் ,
புறாவும் ,குருவியும் ,
தங்கும் இடமாக்கும் .

அலை பேசி கோபுரங்களைப் ,
புறாவும், குருவியும்,
புறக்கணித்தே விட்டோடும்.

கோபுர தரிசனம்,
கோடிப் புண்ணியம்.
ஆலயக் கோபுரங்கள்
கையெடுத்துக் கும்பிட,
அலைபேசிக் கோபுரங்களைப் ,
அண்ணாந்து பார்ப் பாரும் இலர்.

கண்ணிற்கு குளிர்ச்சியும் ,
செவி வழி இசையின் வளர்ச்சியும் ,
ஆலயக் கோபுரங்கள் தந்தன .
கதிர் வீச்சு சுழற்சியும் ,
மாசும் தளர்ச்சியும்,
மாறாமல் தருவது
அலை பேசிக் கோபுரங்கள்.

எழுதியவர் : arsm1952 (5-Jul-14, 4:55 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 66

மேலே