ஏன் இப்படி !...


மலரே
ஏன் மலர மறுக்கிறாய்?
வண்டுகள் மொய்த்துவிடும் என்பதாலா? - இல்லை
மழை பொய்த்துவிட்டது என்பதாலா?

குயிலே!
ஏன் பாட மறுக்கிறாய்?
கூடுகள் உடைந்துதது என்பதாலா? - இல்லை
காடுகள் அழிந்தது என்பதாலா?

தென்றலே!
ஏன் வீச மறுக்கிறாய்?
மாசு கலந்துவிட்டது என்பதாலா - இல்லை
ஏ.ஸி வந்துவிட்டது என்பதாலா?

புறாவே!
ஏன் பறக்க மறுக்கிறாய்?
நிதானம் அழிந்துவிட்டது என்பதாலா? - இல்லை
சமாதானம் ஒழிந்துவிட்டது என்பதாலா?

இயற்கையே!
ஏன் இயங்க மறுக்கிறாய்?
செயற்கையின் காலம் என்பதாலா? - இல்லை
காலத்தின் கோலம் என்பதாலா?

- குட்டி

எழுதியவர் : (13-Mar-11, 6:01 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 512

மேலே