உறக்கம்

இமைகளை முடினேன்
வரைந்தேன் உன் முகத்தை
என்னோடு பேசினாய்
என்னோடு உறவாடினாய்
மறைந்தாய் எங்கோ
தேடுகிறேன்
உன்னை அல்ல
நான் வடித்த கனவை
மீண்டும் உன்னோடு வாழ
உனக்காய் ஒரு பயணம்
--- உறக்கம்

என்ன கொடுமை என் காதலை
நிஜத்தில் மறுக்கிறாய்
ஆனால்
கனவில் ஏற்றுக்கொள்கிறாய்
அதனால் தான் முடிவுசெய்தேன்
கனவில் மட்டும்
என் காதலை வெளிப்படுத்த
உனக்காய் ஒரு பயணம்
--- உறக்கம்

என்னவளே
கனவில் நமக்கு இரண்டு குழந்தைகள்
நிஜத்திலும் உனக்கு இரண்டு குழந்தைகள்
ஒரு சிறிய வித்தியாசம்
உன் கணவன் நான் அல்ல
காதலை மட்டும் அல்ல
வாழ்கையையும் கனவில் மட்டும் தான் தந்தாய்
உனக்காய் ஒரு பயணம்
--- உறக்கம் !!

எழுதியவர் : Vinoth (14-Mar-11, 4:03 am)
சேர்த்தது : Vinothedal
Tanglish : urakam
பார்வை : 386

மேலே