நன்மையின் மறுபக்கம்

விரியாத பூவிதழில் அழகு இல்லை
சிரிக்காத இதழ்களில் அழகு இல்லை

காய்க்காத மரத்திற்கு பெருமை இல்லை
கொடுக்காத கைகளுக்கு பெருமை இல்லை

நீரின்றி கிளைகளில் பசுமை இல்லை
நட்பின்றி மனிதரில் இனிமை இல்லை

பறவைகள் அமராமல் பெருக்கம் இல்லை
பண்புகள் சேராமல் ஆக்கம் இல்லை

விழுதுகள் தோன்றாமல் வளர்ச்சி இல்லை
வாழ்த்துகள் சேராமல் எழுச்சி இல்லை

காடுகள் வளர்க்காமல் செழுமை இல்லை
கண்ணியம் சேர்க்காமல் நன்மை இல்லை

எழுதியவர் : சீர்காழி சபாபதி (5-Jul-14, 8:57 pm)
பார்வை : 144

மேலே