காத்திருக்கிறேன்

என்னுள்
கேட்க்காமல் வந்தவள்
சொல்லாமல் சென்றாள்!

காரணம் சொன்னார்கள்
அவள் கண்களுக்கு
தெரியவில்லையாம்
என் காதல் !

அவளைத் தீண்டித்
திரும்பிய காற்றைக்கூட
கண்டுகொள்ள முடிந்த
என்னால் முடியவில்லை
அவள் உள்ளத்தைக் கண்டுகொள்ள !

கையில் எடுத்துக் காட்ட
என் காதல் என்ன
கரன்சி நோட்டுக்கட்டா!

என் கண்களில்
அவள் காணாத
காதலை நான் எப்படி
காட்டுவேன் கைகளில் எடுத்தா?

காலம் வரட்டும்
காத்திருக்கிறேன் அவள்
கண்கள்
குணமாகும்வரை !

எழுதியவர் : முகில் (6-Jul-14, 11:10 am)
Tanglish : kaathirukiren
பார்வை : 645

மேலே