பேசு தோழி பேசு
பேசு தோழி பேசு
என்றிலிருந்து
கதாநாயகனாக இருந்த நான்
வில்லனானேன்!!!
அன்று
நொடிக்கொருமுறை பேசுவாய்..!
இன்று
ஏசக்கூட பேச மறுக்கிறாய்..!!
அன்று
எனக்காய் பல புன்னகை
சேர்த்து வைத்திருப்பாய்..!
இன்று
முறைத்துக்கூட
பார்க்க மறுக்கிறாய்..!!
அன்று
யாரிடம் நீ பேசினாலும்
எனைப்பற்றி
ஒரு வார்த்தையாவது
கூறாமல் இருக்கமாட்டாய்..!
இன்று
உன் முன்னே நான் வந்தும்
குத்திக்காட்டுவது போல் கூட
எனைப்பற்றி
பேசமறுக்கிறாய்..!!
தவறேதும் செய்திருந்தால்
அன்னையாகி மன்னிப்பாய்..
தனறென்மேல் இல்லையென்றால்
அன்பாய் கொஞ்சம் யோசிப்பாய்..
உன்
அன்பான குரலின்றி
அழகான அதட்டலின்றி
குறும்பான கொட்டலின்றி
சூரியனின்றி
மழையின்றி
சத்தான மண்ணின்றி
வாடும் பயிராய் நான்
வாடிக்கொண்டுள்ளேன்..
சீக்கிரம் வாடி தோழி...
என் வாட்டம் போக்க...
பேசு தோழி பேசு..!!