மீண்டும் வானம்பாடி

குதித்து தாவி
எழுந்து தடுக்கி
பறந்து திரிந்து
வானில் சுற்றினோம்!
வானளந்து ஆடி
விண்ணிலும் துள்ளி
கொண்டாடிக் களித்தோம்
ஒரு காலத்தில்!
நட்பை இழந்து
நேசம் துறந்து
தவித்து துடித்து
நரகம் அறிந்தோம்!
நிம்மதி யாசித்து
நன்மை யோசித்து
நித்திரை மறந்து
நாளும் அலைந்தோம்!
சிறகுகளை வெட்டி
சிம்மாசனம் கட்டி
கனவுகளின் அழிவுகளில்
கரைந்தே போனோம்!
தைரிய வாளெடு
தன்னம்பிக்கை துணைபோடு
தீமைகளை வெட்டிடு
துயரங்களை துரத்திடு !
அயர்ச்சி விரட்டிடு !
முயர்ச்சி தொடர்ந்திடு !
நம்பிக்கை பிடித்திடு !
நிற்காமல் ஓடிடு !
வெற்றியை விருந்தாக்கி
வாழ்க்கையை விருதாக்கி
வாழ்வோம் மகிழ்வோம்
மீண்டும் வானம்பாடியாவோம்!