தமிழன்

அடக்க நினைத்தான் அந்நியன்
அடங்காத் தமிழன் அடங்கவில்லை

தமிழ் மூச்சு அவன் சுவாசம்
பேச்சில் அவன் நிதானம்

பொறுமை காக்க நேரம் இல்லை
புறப்பட்டான் போருக்கு

வென்றான் கொன்றான்
விடுவித்தான் தமிழனை

நாடு காத்தான் தமிழன்
அரசியலே நடந்தது

பொறுக்க முடியவில்லை
அந்நியனுக்கு / ஆவேசம் கொண்டான்

அப்பாவித் தமிழர்களை
அழித்தான் சிறை பிடித்தான்

அவன் நினைத்தான்
வெற்றி தனக்கு என்று

பொறு பொறு தூங்காதே
நீ நினையாத நேரத்தில்

மீண்டும் வருவான்
நேரம் வரும் தப்ப முடியாது

எழுதியவர் : பாத்திமா மலர் (6-Jul-14, 2:29 pm)
Tanglish : thamizhan
பார்வை : 96

மேலே