மீண்டும் வானம்பாடி Mano Red

மீண்டும் வானம்பாடி Mano Red

கல்லறைப்பூ வாசம் சூடிய வாழ்க்கையில்
காணக் கிடைக்காத இன்பம் எதுவோ..??

சருகாய் உலர்ந்த சங்கட பூமியில்
சல்லாபப் பேச்சுக்கள் என்பது எதுவோ...??

தற்புகழ்ச்சி தேடும் மானிடக் கூட்டத்தில்
தன்னிகரில்லா உயர்ந்த உள்ளம் எதுவோ..??

ஒழுங்கற்றுப் போன ஒய்யார உலகை
ஒருங்கிணைத்து அன்பு பாலமிடுவது எதுவோ..??

பஞ்சத்தில் சாகும் பட்டினி உயிர்களை
பட்டியலிட்டு சோறு போடுவது யாரோ..??

வன்புணரப்பட்ட பெண்ணின் வாழ்க்கை மலர
வரம் தரப் போவது யாரோ..??

எல்லாம் அவன் பார்த்துக் கொள்வானென
எக்காளமிட்டு நம்பிக்கை உரைப்பது யாரோ..??

மீண்டு அந்த சொர்க்கபூமி காண
மீண்டும் வானம்பாடி ஆகப்போவது எப்போதோ..??

எழுதியவர் : மனோ ரெட் (6-Jul-14, 2:52 pm)
பார்வை : 103

மேலே