இப்படிக்கு,,, ஏழை
கடவுளுக்கு கடிதம்...!
கடவுள் அவர்களுக்கு,, ஒரு ஏழையின் ,
மடல்...
நீங்கள் நலம்தான், ஆனால் நாங்கள்
நலமில்லை... கோயில், சர்ச், மசூதி,
அனைத்திலும் நீங்கள்
வசதியாகவே வாழ்கிறீர்கள்.. ...
வறுமை பற்றி நீங்கள் அறிந்திருக்க
வாய்ப்பில்லை... .
தூணிலும் துரும்பிலும் உங்களாள்
வசிக்க முடியும்,,
ஆனாலும் உங்களுக்கு ஊரெங்கும்
மாளிகை,,, வீதியில் வாழும் எங்களை,,
விரட்டியபடி....
உங்களுக்கொரு பிரச்சனை என்றால்
ஊரே போர்க்களம் ஆகுது,,,
எங்களை திரும்பி பாக்கவும்
நாதீயில்லை.... வயிற்றுக்காய்
கையெந்தும் எங்களை கடந்து போய்,
வசதியாய் வாழும் உங்களிடம்
தருகிறார்கள் பணத்தை.....
இன்னும் நீண்ட கேள்விகள்
உண்டு என்னிடம்,, ஆனால் எதற்கும்
உங்களிடமிருந்து பதில் வராது....
எனவே இத்துடன் முடிக்கிறேன்,,,
இறந்த பின் எனக்கு சொர்க்கம் வேண்டாம்
வாழும் நாட்களை நரகமாய் மாற்றாதீர்
அது போதும்,,,
இப்படிக்கு,,,
ஏழை