ஊணொடு செய்யுஞ் சிறப்பு - ஆசாரக் கோவை 54
முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய்
கிடக்கையோ டிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்
கூணொடு செய்யுஞ் சிறப்பு. 54 ஆசாரக் கோவை
பொருளுரை:
அறிவுடையோர், புன்சிரிப்புடன் இனிது உரையாடுவது, கால் கழுவ நீர் அளிப்பது, உட்கார தகுந்த ஆசனம் கொடுப்பது, படுக்கப் பாய் கொடுப்பது, தங்க இடம் கொடுப்பது ஆகிய ஐந்தும் தம்மிடம் வரும் உறவினர், நண்பர் முதலானவர்க்கு உணவளிப்பதுடன் செய்யுஞ் சிறப்புகள் ஆகும் என்பர்.
கால் நீர் – பாத்யம், கைகழுவு நீர் - அர்க்கியம். இவை சோடச உபசாரங்களாகும்.