போகின்றான் கடை பயணமே

போகின்றான் கடை பயணமே,
என் நண்பனே, இறுதி வரை துணை
இருப்பேன் என்றவனே

இயல்பினில் தயக்கங்கள் கொண்ட
சிறுவன் நான், என் கை பிடித்து விளையாட
அழைத்து, போக்கியவன் தயக்கங்களை

விட்டவனில்லை எந்தன் செய்யை
அன்றிலிருந்து அவன் கடை மூச்சு வரை

பள்ளியில் பலர் கேலி செய்ய, இவன்
அவர்களை தூர நிற்க செய்ய, கவசமாகி
காத்தான் என்னையே

படிப்பினில் நான் திண்டாட, அறிவினில்
அவன் விளக்காக, ஆசானாய் மாறி
அறிவினை வளர்த்தான் எனக்கு

பாடங்கள் புரியாமல் நான் தடுமாற,
விளக்கங்கள் தந்து அவன் தடைகளை
விலக்க

விளையாட்டில் நான் உயர்ந்தோங்க,
ஊக்கினான் மேலும் நான் சிறந்தோங்க

கல்லூரியில் காலடி வைத்ததும்
இவன் என் நிழலாய் அங்கும் இருந்ததும்
சரித்திரம், எங்கள் நட்பின் மேன்மை
தந்தது பலருக்கு ஆச்சரியம்

பட்டங்கள் பெற்று வெளி உலகினில்
நான் வேலைக்கு திண்டாடியதும்,
கட்டங்கள் போட்டு அவன் எனக்கு
வழி காட்டியதும்

பருவங்கள் வந்து திருமண பேச்சுக்கள்
வீட்டினில் துவங்கியதும், என் துணை
தேடிட நண்பனின் துணை நாடியதும்

தேர்ந்தெடுத்தான் அற்புத பெண்ணை
எந்தன் உறு துணை ஆனது வாழ்வினில்
ஒன்றல்ல, இரண்டாய்

அவன் வாழ்வினில் சந்தித்த பெண்களில்
ஒருத்தியை எந்தன் சம்மதம் கேட்டு
துணையாக கொண்டான்

இருவரின் நட்பு, இரு குடும்பத்தின்
நட்பாய் மாறியது, அது சிரிப்பலைகளை
வாழ்வினிலே சேர்த்தது

என் வாழ்க்கை துணை, பிரசவத்தில்
உயிருக்கு போராடிய நிலையில்,
அவன் விடவில்லை எந்தன் கைகளை
ஒரு நொடியும்

எந்த செலவை பற்றியும் தரவில்லை
எனக்கு கவலை

விளையாட சிறு வயதினில் பிடித்த
என் கையை விடவில்லை அவன் படுக்கையில்
விழும் நாள் வரையில்

கடை வரை இருப்பேன் என்றவன், போகின்றான்
கடை பயணம், நான் தவிக்கின்றேன் உயிரில்
பாதியை இழந்து விட்டே

கண்ணீர் அஞ்சலி செலுத்திடலாம், கட்டி புரண்டு
அழுதிடலாம், கல்லும் கரைய கதறிடலாம்

ஏது நான் செய்தாலும், என்னை பிடித்த கை
கிடைத்திடுமோ, துணையாகவே,

சென்று விட்ட உயிரை எனக்குள் சேர்த்து
கொள்ள தவிக்கின்றேன், நின்று விட்ட அவன்
ஆவியை எந்தன் நிழலாக கொள்ள ஏங்குகின்றேன்

நண்பனே, நீ அறிவாய், என் நிலைமையை,
செத்தும் காத்திடுவாய் என்னை, நம்புகிறேன்
இப்பொழுதும் நீ இருக்கின்றாய் என்னுடன்
என்ற உண்மையை

எழுதியவர் : நிர்மலா முர்த்தி (7-Jul-14, 2:23 am)
பார்வை : 156

மேலே