எட்டிப்பிடித்தேன் ஏழு நூறை - 700

​ஏனிந்த இன்பம் இந்த இளமயிலுக்கும் ​
ஏழிசை ஒலிகளை ஒன்றாய் கேட்டதோ !
ஏந்தல் என்றே என்னையும் நினைத்ததோ
ஏழுநூறை தொட்டதால் தோகை விரித்ததோ !

ஏறிட்டு நோக்குது வியப்புடன் வினவுதே
ஏட்டு சுரைக்காய் எழுத்தில் நிலைக்குதே
ஏற்ற இறக்கமுடன் எழுதியும் தள்ளுதே
ஏக்கப் பார்வையில் எனக்கும் அதுபுரியுதே !

ஏற்பவர் என்னையும் எழுத்தில் சிலரே
ஏற்காத மனங்களும் தூற்றாது என்னை !
ஏழை நானும் எண்ணங்களை வடிப்பதில்
ஏற்றம் எனபது எவர்க்கும் நிலையல்லவே !

ஏற்றிய சுடராய் என்றும் ஒளித்தந்திடவே
ஏற்றிடும் திரியாய் என்றும் நிலைத்திடவே
ஏற்பிசை உள்ளங்களும் ஏற்குமே என்னை
ஏவலன்தானே நானும் அன்னை தமிழுக்கு !

( ஏந்தல் = அரசன் / மகன் )

( ஏற்பிசை = ஒப்புக்கொள்ளாத )


​ ​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Jul-14, 7:40 am)
பார்வை : 134

மேலே