மீண்டும் வானம் பாடி
சாதிய சதியை அம்பலம் ஆக்குவேன்
மதத்தின் மதம் அறுக்கும் போர்வாள்
பாலின சமத்துவம் பேசுவேன் என்றும்
உயர்வும் தாழ்வும் குணத்தால் என்பேன்
மானம் பெற்றிட சுயமரியாதை சொல்வேன்
பகுத்தறிவின் படி நடப்பேன் என்றும்
இனமானம் காக்க ஓரணி திரட்டுவேன்
தமிழனின் புகழ் தரணியில் நாட்டுவேன்
மூடநம்பிக்கைகளின் முகமுடி தனை கிழிப்பேன்
உண்மை அறிவியல் உலகுக்கு சொல்வேன்
பொய்,பித்தலாட்டம் ,புரட்டுகள் கொல்லும்
புதுமை கைத்தடி என்வசம் என்றும்
சமத்துவ உலகம் சமைக்க வேண்டி நான்
சரண் அடைந்தேன் ஈரோட்டின் பாதையில்
புதுவிதி படைக்க எடுத்த கொள்கை அது
என்றும் உலகுக்கு 'மீண்டும் வானம்பாடி'