அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான் (சிறுகதை)

இன்னும் அவிழாத இரட்டை சடை பின்னலுடன் கால் வரை தவழும் கூந்தலும், மறையாத சந்நனமாய் ஒளிரும் காலையில் பூசிய மஞ்சள் முகத்துடன் மின்னும் அனிதா அகாலமாய் மறைந்த அப்பா,அம்மா புகைப்படத்தை வணங்கியபடி பனை நார் கட்டலில் அமர ....

அவள் பாட்டியை சமாதான படுத்தி ...கொஞ்சம் இருங்க பாட்டி அருண் மற்றும் அவன் நண்பர் குழுவிடம்..சொன்னா கேளுங்க 5000 க்கு குறையாமல் நான் வரமாட்டேன். ஏன்னா நீ குறைக்கிறத பார்த்து எல்லோரும் குறைக்க சொல்றாங்க..நான் என்ன பண்றது..தயவு செய்து தொகையை குறைக்காதீங்க ..பாட்டி குறுக்கிட்டு. சரி நீங்க நாளைக்கு வாங்க தம்பி..அவள் அப்படித்தான்..நான் பேசி சரி பண்ணிக்றேன்.

ஏன் பாட்டி..நாளைக்கு வர சொல்றீங்க..அமைதியாய் அனிதா கேட்க பாட்டி பதிலடியாய் நாளைக்கு நீயே தெரிஞ்சுப்பமா..ன்னு சொல்லி விட விடாப்பிடியாய்.. ஏன் பாட்டி சொல்லு என்று கூறி முடிப்பதற்குள் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

மறுநாள் காலை..
கைபேசி அழைப்பின் ஒலியால் எழுந்து ஹலோ..அருகினில் தூங்கிய பாட்டியும் யாரும்மா..தங்கச்சி பாட்டியம்மா..சொல்லுடி பிரியா ...ஏதோ அமைதியாய் கேட்டு விட்டு..சரிம்மா அக்கா எப்படியாச்சும் ஒரு வாரத்துக்குள் உன் விடுதி முகவரிக்கு மணியார்டர் பண்ணி விடுறேன்பா..நீ நல்லா படிக்கணும் சரியா..அக்கா அப்றம் உனக்கு போன் பண்றேன் கண்ணு..சரியா..

பாட்டியை பார்த்தவாறு ஏன் பாட்டி பிரியா நேற்று பேசியதை என்கிட்ட சொல்லவே இல்ல..பணம் கேட்டாளா? மௌனமாய்
அனிதாவின் பாட்டி தொய்ந்த குரலில் ஆமாம்பா...சரி நேற்று வந்தவங்க போன் நம்பர் ஆச்சும் கொடுத்தாங்களா? இல்லையேம்மா..என்று பாட்டி பதிலுறைக்க..காதை பிளக்கும் மணி ஒலியுடன் பால்காரன்.

மார்க்கெட் கிளம்பிய பேத்தியிடம், நேற்று வந்தவங்க வந்தாங்கன்னா அட்வானஸ் வாங்கி கொள்ளலாமா? என்ற உடன் எதுவும் யோசிக்காமல் அவங்க என்ன தாராங்களோ அதை வாங்கி வைங்கன்னு..சொல்லி புறப்பட..

நேற்று வந்த அருண் மற்றும் அவன் நண்பர் குழு, நீங்க சொன்ன மாதிரியே சம்மதிக்க வச்சீட்டீங்க..இருந்தாலும் உங்க பேத்திக்காக நாங்க 6000 கொடுத்து உற்சாகப்படுத்தலாம்னு இருக்கோம் பாட்டி, மகிழ்ச்சியுடன் பாட்டி 'என்னப்பா பண்றது அவ அம்மா போய் விட்டாக்கூட இந்த கரகாட்ட கலையை அவளுக்கு ஊரே பாராட்டுர அளவுக்கு கற்று தந்துட்டு போய்ருக்கா..' இன்னைக்கு அவள் இந்த வயசிலே இவ்ளவ் சம்பாதித்து அவ இரண்டு தங்கச்சிகளையும் என்னையும் நல்லா பார்த்துக்றாப்பா...

எழுதியவர் : நெல்லை பாரதி (7-Jul-14, 4:22 pm)
Tanglish : aval abbadiththan
பார்வை : 142

மேலே