காதல் தருணம்

என் இரவுக்கு உறக்கம் உன் கனவு
என் இதயத்திற்கு இதம் உன் நினைவு
என் கண்களுக்கு வெளிச்சம் உன் முகம்
என் காதலுக்கு குளிர்சம் உன் அன்பில் அமரும் சுகம்
என் கண்கள் உன்னை தானாக தேட வில்லை
என் காதல் மனம் உடனே ஊடுருவ
என் கண்கள் அதற்க்கு சேவகனாகி வேலை செய்கிறது
உன் முகத்தை எனக்கு வெளிச்சம்மாகிடவே காதலி.