என்னவள்
நான் தூங்கும் போது என் கண்ணம் கில்லும் கள்ளி அவள்!!!
அளவில்லா அன்பை வாரி வழங்குவதில் எனை தோற்கடித்து
வெல்லும் அன்பு வில்லி அவள்!!!
காதல் வில்லால் அன்பு அம்பால் என்னை தைத்து என் மனச்சுவரில்
ஒட்டி கொண்ட பல்லி அவள்!!!
கறி சட்டியில் கறி கிளறி மீன் குழம்பு
மறுநாள் தந்து அவள் மடியிலே
மயங்க வைப்பதில் கில்லி அவள்!!!
என் காதலி அல்லி
அவள் காதல் பூ மல்லி
என் அன்பு குள்ளி
அவள் வைத்தாள்
என் இதயத்தில் புள்ளி!!!
அதையே தினமும் சொல்லி!!!
எனை சுற்றி வருவாள் துள்ளி!!!
என் அன்பு குள்ளி
என் காதல் கள்ளி.....