மீண்டும் வானம் பாடி

கஞ்சி கலயமும் காஞ்சி பட்டும்
வஞ்சி நடையில் விஞ்சி சிரிக்கும்
சேற்றுக்குள் செக்கிழுக்கும் எம்குல காளைகள் !

பஞ்சமிலா பாவாடை இடை சொருகி
வரப்பு கரையில் நீ நடந்தால்
வழுக்கி விழும் காளை மனம் !

பஞ்சம் போக்கும் காளைக்கு பஞ்சணையும் நீ
பொங்கி ஒழுகும் வியர்வை முத்தை
முந்தியிலே துடைக்கையிலே நெஞ்சமெல்லாம் படபடக்கும்
தஞ்சம் புகுந்து நெஞ்சில் நிரந்தரமாகத் துடிக்கும்

பஞ்சணையில் படுத்தாலும் பாதம்பால் குடித்தாலும்
கிடைக்காத சுகமென்றால் அது உன் முந்தியடி
பகல் பொழுதில் உழவோடு இரவானால் உன்னோடு
கனா காணும் காலங்கள் கஷ்டத்தில் உலலுதடி

மௌனமாய் நீ சிரிக்கையிலே முழுநிலவும் தோற்க்குமடி
நம் இரவின் முனுமுனுப்பே தினம் தினமும்
மீண்டும் மீண்டும் வானம்பாடியாய் மீட்டுவோமடி!!

எழுதியவர் : கனகரத்தினம் (8-Jul-14, 12:35 am)
பார்வை : 246

மேலே