தமிழா தமிழா
எட்டு திக்கும் கொடி கட்டி
எட்டி நடை போடணும் தமிழா
பட்டு ஜரிகை ஆடை கட்டி
பட்டி தொட்டி ஜொலிக்கணும் தமிழா
கடமை கண்ணியம் கட்டுபாடுடன்
கருத்து ஒற்றுமை கடைபிடிக்கணும் தமிழா
கல்வி செல்வம் கற்பனை வளம்
கலந்து காப்பியங்கள் உருவாகணும் தமிழா
பசி பட்டினி பஞ்சத்தில் தவிக்கும்
பிற ஊர்களுக்கு உணவு பகிறணும் தமிழா
சண்டை சச்சரவு பிணக்கு கூடிய
பிற மக்களின் வாழ்வில் சமாதானம் மலரச்செய் தமிழா
இனி உருவாகும் புது கண்டுபிடிப்புகள்
உன் சிந்தையில் பிறந்து தமிழ் பெயர் சொல்லணும் தமிழா
நிலவை விடுத்து விண்வெளி எங்கிலும்
நம் கொடியுடன் உலகிற்கு அறிமுகம் செய் தமிழா
கணினிக்கு அடுத்த புதிய கண்டுபிடிப்புகள்
தமிழில் இயங்க ஏற்பாடு செய் தமிழா