வாழ்வின் வரிகள்

உணர்ந்தவனுக்கு காதல் வானவில் போன்றது,
உணராதவனுக்கு அந்த வானமே வில் போன்றது...!

காதலி கிடைக்க பெற்றவன் அதிர்ஷ்டசாலி,
காதலை கொடுக்க பெற்றவன் திறமைசாலி...!

திருமணத்திற்கு முன் காதலியுடன் நடந்து போகிறவன் பாக்கியவான் ,
திருமணத்திற்கு பின்பும் மனைவியுடன் நடந்து போகிறவன் யோக்கியவான்...!

திறமை உள்ளவர்கள் பேசுவதில்லை,
பேசுபவர்கள் எல்லாம் திறமைசாலிகள் இல்லை..!

நாட்டை காக்க அரசியல் எல்லையாம்,
அரசியலை காக்க யாரும் இல்லையாம்...!

விவேகானந்தர் தேடி திரிந்ததோ என்னவோ இளைஞர்களை,
இங்கு, இளைஞர்கள் தேடுவது என்னவோ வேலையை....?

நான் எழுத நினைத்த ஒன்று,கவிதை.....
நான் எழுதி முடிதிருப்பதோ கட்டுரை..

பெண்கள் எழுதினால் அது கவிதை,
ஆண்கள் எழுதினால் அவன் கழுதை..!
.
.
.
இறுதியில் ஒரு முரண்பாடு ,
இது கவிதையா,அல்ல கழுதையின் கணையா என்று ..

எழுதியவர் : அர்ஜுனன் (8-Jul-14, 12:13 am)
பார்வை : 823

மேலே