விந்தையானவன் நீ - ஆனந்தி

அன்பே எனை மறந்தாயா
எப்படி முடிந்தது உன்னில் ....
கலங்கரை விளக்கமாய்
காலங்காலமாக
காதலுக்கு சொல்லி வந்த
இலக்கணம்
மாற்றினாயே ...சொல்
அந்த யுக்தி இங்கே
பலருக்கு தேவை ...
நிஜத்தில் நானில்லை
தெரியும் -உன் நினைவுகளின்
ஓர விளிம்புகளில் கூட
நானில்லையா - என்னே
விந்தையானவன் ....நீ......
தடுமாறிய மனதோடு இடர்பாடாய்
ஓர் வாழ்க்கை வாழுகிறேன்
நானும் வாழ்கிறேன்
தினம் தினம் ஆயிரம் முறை
மனதோடு கேட்டு கொண்டு.....
உன் பார்வைகள் பொய்யா....
உன் வார்த்தைகள் பொய்யா....
உன் கடிதங்கள் பொய்யா.....
உன் பரிதவிப்பு பொய்யா........
உன் நேசங்கள் பொய்யா.......- நீ
நேசித்ததே பொய்யா .......