உன் பிரிவில் இழக்கிறேன் உயிரை 555
![](https://eluthu.com/images/loading.gif)
பிரியமானவளே...
நான் எதோ கவிதையென
எழுத முயற்சித்து...
என் வீட்டு ஜன்னலோரம்
வார்த்தைகளை கோர்த்து கொண்டு...
நான் அமர்ந்திருந்த போது...
நீ என் வீட்டு ஜன்னலை
கடந்து சென்றாய்...
உருவமான கவிதை என்னை
கடந்து சென்றதால்...
நான் என்னை மறந்தேன்
என்னை இழந்தேன் உன்னிடத்தில்...
கோர்த்த வார்த்தைகளும்
பாதியிலே நின்றதடி...
சில்லென்று வீசிய அந்திமாலை
பொழுதின் காற்றில்...
உன் கூந்தல்
என்னை வருடியதடி...
அந்த நிமிடங்களில் நான்
என்னை மறந்தேன்...
என் நெஞ்சில் நான் ஏற்றிய
சுகமான சுமை நீதானடி...
இன்று,
சுமையென நினைவுகளை
இறக்கவும் முடியவில்லை...
சுகத்தை இழக்கவும்
முடியவில்லை...
என்னை நீ பிரிந்து
சென்ற அந்த வினாடி...
என் உயிரும் என்னை
விட்டு பிரிந்ததடி...
அன்று உன்னிடத்தில்
என்னை இழந்தேன்...
உன்னால் என் உயிரை
இழக்கிறேன்...
உன் பிரிவில் இன்று.....